காரைக்கால் அருகே நடந்து சென்ற நபர் மீது கிரேன் இயந்திரம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: X