“ஆட்சியில் அதிகார பகிர்வு கொடுத்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி”.. திருமாவளவன்

தவெக அமைச்சரவையில் இன்று (மே.22) விசிக சார்பில் திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்ட பதிவில், “தேர்தலின்போது விசிக இடம்பெற்ற மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எங்களது நன்றிகள். ஆட்சியில் அதிகார பகிர்வு கொடுத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என முழக்கமிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி. விடுதலை சிறுத்தைகளின் கனவு இன்று நனவாகியுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி