திருச்சி ராமலிங்க நகரில் மளிகை கடை நடத்தி வரும் ஜெயச்சந்திரன் கடைக்கு வந்த புத்தூர் குளத்து மேடு தெற்கு முத்துராஜா தெருவை சேர்ந்த ரவுடி கருவாட்டு மணி என்கிற மணிகண்டன் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க மறுத்துள்ளார் அது மட்டுமின்றி பணம் கேட்ட மளிகை கடை பெண் ஊழியர் உதயவல்லியை தாக்கியுள்ளார் இதில் காயமுற்ற உதயவள்ளி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் சம்பவம் குறித்து ஜெயச்சந்திரன் புகாரின் பேரில் வழக்கு பதிந்த உறையூர் போலீசார் ரவுடி கருவாட்டு மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.