திருச்சி பீமநகரைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர் நேற்று (நவம்பர் 10) 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளைத் தேடி வந்த போலீசார், சதீஷ்குமார் என்பவரை விரட்டிப் பிடிக்க முயன்றபோது அவர் அறிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் சதீஷ்குமாரை காலில் சுட்டுப் பிடித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சதீஷ்குமாரை மாநகர கமிஷனர் காமினி நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.