தஞ்சாவூர்: இளைஞர் விளையாட்டு திருவிழா ஜன. 22 இல் தொடக்கம்

தஞ்சாவூர் கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளபடி, 16 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் தடகளம், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட், ஓவியம், கோலப்போட்டிகள் இடம்பெறும். ஜனவரி 21 மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலமாகவோ அல்லது போட்டி நடைபெறும் நாளிலோ நேரடியாகப் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 74017-03496, 95140-00777 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி