கடந்த பிப். 10 - இல்நாச்சியார் கோவிலிருந்து கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் திருச்சி மாவட்டம், செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்த மஞ்சுளா சென்ற போது அவரின் கைப்பையில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடு போனதாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதே போல் மார்ச் 25 - இல் ஒப்பிலியப்பன் கோயில் திருவிழாவில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க நகையை திருடு போனதாக திருவாருர் மாவட்டம், சுட்டுக்கரை தெருவைச் சேர்ந்த சுப்பையன் என்பவர் திருநீலக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி(வயது 28), நாகப்பட்டினம் மாவட்டம், கீழவேளுர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (வயது 28) ஆகிய 2 பேர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 12 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தார்.