தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் துகிலி வெள்ளாளர் தெருவில் மூன்று பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சோதனை நடத்தினர். இச்சோதனையில் மகாலிங்கம் (61), தியாகராஜன் (55), கண்ணன் (50) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பாராட்டி உள்ளார்.