திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியில், பிரான்ஸிலிருந்து வந்த இஸ்மாயில் என்பவர் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்த சமயம் பார்த்து, அவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன், வீட்டின் பீரோவிலிருந்து குழந்தையின் கொலுசை மட்டும் திருடிச் சென்ற சென்னை மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த முகமது கனி (19), பாலகிருஷ்ணன் (20), கார்த்தி (24) ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.