திருநாகேஸ்வரத்தில் 75 வயது மூதாட்டி தவமணியின் வீட்டிற்குள் புகுந்த பெண் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். தடுக்க முயன்ற மூதாட்டி மீது மிளகாய் பொடியைத் தூவிவிட்டு தப்பியோடியுள்ளார். திருவிடைமருதூர் போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி சாந்தியை கைது செய்து, நகையைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் மூதாட்டியே கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.