பின்னர் கொடிமரத்திற்கும், உற்சவர் பெருமாள் மற்றும் தாயாருக்கும் நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இந்த விழாவில் கோயில் செயல் அலுவலர் பிரபாகரன், கோயில் பட்டாச்சாரியார்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சூரியபிரபை, யாழி, கிளி, சேஷ, அனுமந்த, கமல, வெள்ளி யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான கல்கருட சேவை வருகிற ஜனவரி 6ம் தேதி மாலையும், 10ம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து 11ம் தேதி இரவு பெருமாள் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.