இது தொடர்பாக பாமக மாவட்ட செயலர் ம. க. ஸ்டாலின் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆரலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் முகநூலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து அவதூறாக தகவல்களை பதிவேற்றம் செய்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை தூண்டி விடுகிறார்.
இவர் மீது கல்வித் துறையும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது, முன்னாள் பாமக மாவட்ட செயலர் கோ. ரவிச்சந்திரன், வழக்குரைஞர் இளங்கோவன் மற்றும் அணைக்கரை பகுதி பொதுமக்கள் இருந்தனர். பின்னர், கும்பகோணம் உதவி ஆட்சியர், திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் மனுக்களை கொடுத்தனர்.