சுவாமிமலை: வரலாற்று பெருமையை விளக்கும் அஞ்சல்தலை வெளியீடு

சனிக்கிழமை கும்பகோணத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையைப் பிரதிபலிக்கும் நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. முருகன், சிவபெருமானுக்கு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார் என்ற புராண வரலாற்றின் அடிப்படையில், 'ஓம்' என்ற தமிழ் வடிவத்துடன் இந்த முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தமிழர் மரபு, சுவாமிமலையின் தனித்துவம் மற்றும் பழைமையான கோயில் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அஞ்சல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி