திருவிடைமருதூர் அருகே மேல மருத்துவக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், திருமங்கலக்குடியைச் சேர்ந்த மாணவர் பாலகிருஷ்ணனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு மாணவியை அழைத்துச் சென்று தாலி கட்ட முயன்றுள்ளார். மாணவி மறுப்பு தெரிவித்ததால், அவரை பாலகிருஷ்ணன் தாக்கியுள்ளார். காயமடைந்த மாணவி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.