வலங்கைமான் அருகே மேலவிசலூர் ஊராட்சி, சாந்தவெளி கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் சுவாமி, ஸ்ரீ கோதண்ட ராமர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காரை சித்தர் சன்னதிகள் திருப்பணிகள் நடைபெற்று, வர்ண கலாபம் செய்து ஆலய மகா கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் 8-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, விஷேச சந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கும்பாபிஷேக பெருவிழா துவங்கியது.