தஞ்சை: எஸ்.ஐ.ஆர் பணி அழுத்தம்.. அங்கன்வாடி பணியாளர் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி சுமையால் மன அழுத்தத்திற்கு ஆளான அங்கன்வாடி பணியாளர் சித்ரா (57) செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலும், அங்கன்வாடி மையத்திலும் பல மாத்திரைகளை உட்கொண்டு மயங்கினார். தற்கொலை கடிதம் எழுதி வைத்திருந்த அவரை சக பணியாளர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தகவலறிந்து வந்த மற்ற அங்கன்வாடி பணியாளர்கள் பணிச்சுமையைக் குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி