கபிஸ்தலம்: காவிரி ஆற்றில் மணல் கடத்தல்.. இருவர் கைது

கபிஸ்தலம் அருகே அலவந்திபுரம் காவிரி ஆற்றுப்பகுதியில் போலீசார் நடத்திய ரோந்துப் பணியில், சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்திய சுவாமிமலையைச் சேர்ந்த அருள் (34) மற்றும் ஆற்றில் மணல் அள்ளிய முருகேசன் (57) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி