கும்பகோணம் தெற்கு உபகோட்டத்திற்கு உட்பட்ட திருநாகேஸ்வரம் மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வருகிற 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால், முருக்கங்குடி, தண்டந்தோட்டம், ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், மாங்குடி, முதல்கட்டளை, இரண்டாம்கட்டளை, ஏழாம்கட்டளை, புத்தகரம், எஸ். புதூர், ஆவணியாபுரம், அம்மாச்சத்திரம், திருபுவனம், திருநீலக்குடி, வேப்பத்தூர் மற்றும் திருநாகேஸ்வரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய தெற்கு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.