கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் மற்றும் திருப்பனந்தாள் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். திருப்புறம்பியம், சுவாமிமலை, இன்னம்பூர், கொட்டையூர், பாபுராஜபுரம், ஏரகரம், மூப்பக்கோவில், வலையப்பேட்டை, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதிக்கப்படும். திருப்பனந்தாள், சோழபுரம், அணைக்கரை, தத்தூவாஞ்சேரி, மானம்பாடி, கோவிலாச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.