ஆடுதுறை பகுதியில் நாளை மின்தடை

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனால் ஆடுதுறை, எஸ். புதூா், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூா், கஞ்சனூா், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோவில், திருவிடைமருதூா் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி