பதவிக்காக எதையும் செய்ய துணிந்த ஓபிஎஸ்: டிடிவி தினகரன்

கும்பகோணம் வட்டம் சுவாமிமலை அருகே அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், பதவிக்காக எதையும் செய்ய ஓபிஎஸ் துணிந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஓபிஎஸ் தற்போது 3.0-வை யார் சொல்லித் தொடங்கினார் என்பது தெரியவில்லை என்றும், தர்மயுத்தத்தை தர்மர் நடத்த வேண்டும் என்றும், அதர்மவாதி நடத்தினால் அதர்மத்தில்தான் முடியும் என்றும், துரியோதனன் கூட்டத்தில் சென்று சேர்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார். சட்டப்பேரவை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி