ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் கம்யூ. போராட்டம் ஒத்திவைப்பு.

கும்பகோணத்தில் நீா்நிலைப் பகுதிகளில் உள்ள வீடுகளை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கியது. இந்நிலையில் இந்த வீடுகளை அகற்றக் கூடாது, அவா்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நேற்று (செப்.23) கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.

இதற்காக மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மற்றும் வீட்டின் உரிமையாளா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நேற்று திரண்டனா்.

இதையடுத்து அங்கு வந்த உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனா்.

தொடர்புடைய செய்தி