தாளடி: புதிய நெல் ரகம் விவசாயிகளுக்கு அறிமுகம்

தாளடிப் பட்டத்திற்கேற்ற உயர் விளைச்சல் ரகம். வயது 130 நாட்கள். முழுமையான வெளிவந்த கதிர்கள். இவ்விழாவில் விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் மாநில பயிர் ரக வெளியீட்டுக்குழு உறுப்பினர் திரு காவிரி தனபாலன் (கீழ் வேளூர், நாகை) வயல் விழாவில் கலந்துக் கொண்டு நெல் ரக வரிசை ஏடி 13253 வின் சிறப்பியல்புகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். 

மேலும் இவ்விழாவில், தமிழ் நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நெல் விஞ்ஞானிகள், முனைவர் மு. தண்டபாணி, முனைவர் வி. சத்தியநாராயணன் கலந்து கொண்டு புதிய நெல் ரகத்தின் விளைச்சல் திறன், நோய் பூச்சி எதிர்ப்புத் திறன், சாயாத தன்மை, மணிகள் உதிராத் தன்மை போன்ற பண்புகளை விவரித்தார்கள். திருப்பனந்தாள் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் திரு கார்த்திக், திருவிடைமருதூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் திரு ராஜதுரை கலந்துகொண்டு நெல் ரக வரிசையின் விளைச்சல் திறனை பரிசோதித்தார்கள். 

விளைச்சல் ஒரு ஹெக்டருக்கு 6000 கிலோவிற்கு மேல் கிடைக்கும் என முடிவு செய்யப்பட்டது. இந்த நெல் ரக வரிசையைப் பயிரிட்ட விவசாயி திருக்கோடிக்காவல் வெங்கட் ராமன், இந்த நெல் ரக வரிசை, குறைந்த உரத்தேவை கொண்டதோடு மட்டுமல்லாமல் பூச்சி நோய்த்தாக்குதல் இல்லாமல் சாயாமல் இருப்பதை தெரிவித்தார். திருக்கோடிக்காவல் கிராமத்தினைச் சேர்ந்த 25 விவசாயிகள் கலந்துகொண்டு பயிர் ரக வரிசையின் விளைச்சல் திறனைப் பார்வையிட்டார்கள்.

தொடர்புடைய செய்தி