தஞ்சாவூரில் 200 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ. 6000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி