தஞ்சை: மாரியம்மனுக்கு 5 லட்சம் ரூபாய் கரன்சி நோட்டுகளால் அலங்காரம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் தலையாரி தெருவில் பாதாள மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், வறுமையிலிருந்து பக்தர்கள் செழிப்பான நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடப்பது வழக்கம். 

இந்த ஆண்டு 2025 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பாதாள மகா மாரியம்மனுக்கு 50, 100, 200, 500 ஆகிய புதிய கரன்சி நோட்டுகளைக் கொண்டு ரூ. 5 லட்சம் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் திருபுவனம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த பாதாள மகா மாரியம்மனைத் தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி