செப்டம்பர் 22, 2022 அன்று கும்பகோணம் அருகே ராஜாங்கநல்லூரில், மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்த டிராக்டர் ஓட்டுநர் நாகராஜை சமாதானம் செய்ய முயன்ற உறவினர் சங்கர், நாகராஜால் இரும்புக் குழாயால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கும்பகோணம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜெ. ராதிகா, குற்றவாளி நாகராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.