கும்பகோணம்: திமுக வடக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம்

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் மாவட்ட அவைத்தலைவர் க. நசீர்முகமது தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொறுப்பாளர் க. அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் எம். பி செ. இராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் மு. க. ஸ்டாலினின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது, மார்ச் 8-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது, 'வெல்லும் தமிழ் பெண்கள்' மற்றும் 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்புகளில் பிப்ரவரி மாத பரப்புரைக் கூட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி