அய்யாவாடியில் இரண்டு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

அய்யாவாடியில் அருள்மிகு ஸ்ரீ தாமோதர விநாயகர் ஸ்ரீ மகிழம்பூ விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விவசாயி விசைத்தெளிப்பான் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா அய்யாவாடி பாலக்கரை தெருவில் உள்ள அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தாமோதர விநாயகர் ஸ்ரீ மகிழம்பூ விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது, 

இன்று 4 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹுதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து, விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார் சங்கர், புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விவசாயி விசைத்தெளிப்பான் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி