தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் ஒன்றிய அரசு நிதி வழங்காததை ஏற்கனவே முதலமைச்சர் கண்டித்துள்ளார். அது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சரை சந்தித்தார்கள். மீண்டும் அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துவது என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. கல்வி என்பது அந்தந்த மாநிலத்தில் அம்மாநில மக்களுக்கு என்ன தேவை என்பதை அந்த மாநில அரசுகள் முடிவு செய்தால் தான் சரியாக இருக்கும். எனவே, இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்பது தான் மாநில அரசினுடைய நிலைப்பாடு என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு