திருவிடைமருதூர்: காவலர் குடியிருப்புக் கட்டடம் திறப்பு விழா

திருவிடைமருதூர் சரக காவல் துறையினருக்காக காவலர் மற்றும் தலைமை காவலர்கள் தங்குவதற்கு ஏதுவாக ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் திருவிடைமருதூரில் புதிதாக கட்டப்பட்ட 24 காவலர் குடியிருப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், சார் ஆட்சியர் ஹிருத்யாவிஜயன், காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன், மேயர் சரவணன், துணைமேயர் தமிழழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். 

இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர் கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், பேரூராட்சி செயலாளர் சுந்தரஜெயபால், திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜு, காவல்துறை ஆய்வாளர்கள் ராஜா, ராஜேஷ், கவிதா, உதவி ஆய்வாளர்கள் வினோத், சுகன்யா, கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி