தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே அணைக்கரை மீன் சந்தையைச் சோ்ந்த அன்பரசன் (38), வியாழக்கிழமை இரவு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை மது அருந்திவிட்டு வந்து, தூங்கிக் கொண்டிருந்த மனைவி அகிலாவின் (28) தலையில் கிரைண்டா் குழவி கல்லைப் போட்டு கொலை செய்தாா். தகவலறிந்த திருப்பனந்தாள் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அன்பரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.