தஞ்சை: கொலை வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வீரச்சோழனாற்றில் ஆண் சடலம் கிடந்த வழக்கில், நண்பரைக் கொன்ற ஓசாமா மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சச்சின், நண்பா் ஓசாமாவின் தவறான பழக்கங்களை விடியோ எடுத்து பணம் பறித்ததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி ஓசாமா செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தொடர்புடைய செய்தி