தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து, டிப்பர் லாரியின் சக்கரத்தில் மோதி, அதே நேரத்தில் ஆடுதுறை நோக்கி வந்த மற்றொரு அரசு நகர பேருந்திலும் மோதியதில் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 11 பயணிகள் காயமடைந்து திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.