சுவாமிமலை கோயிலில் இன்று..வெளியான தகவல்

கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம், விநாயகர், வள்ளி-தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்துக்கு எழுந்தருளல், இரவு யாக சாலை பூஜை, சுவாமி வீதியுலா நடைபெறும். பிரதான விழாவான தேரோட்டம் திருக்கார்த்திகை நாளான டிசம்பர் 3-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி