தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: -வேட்டமங்கலம் கிராமத்திற்கு வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்திலிருந்து பேருந்து வசதி இல்லை என்று கோரிக்கை வைத்ததை அடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்து இப்பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள கோணுலாம்பள்ளம் கிராமம் வரை வந்து செல்கின்ற தடம் எண். A34 பேருந்தினை பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி காலை, மாலை என மூன்று முறை வந்து செல்லக்கூடிய அளவிற்கு தடநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்கள் கேட்கின்ற அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.