காவிரிவிழிப்புணர்வு யாத்திரையில்பக்தர்கள் பங்கேற்கஅழைப்பு

துலா மாதத்தில் காவிரி வழிபாடு மிக முக்கியமானது என்றும், நீர்நிலைகளை தூய்மையாக வைத்து வணங்க வேண்டும் என்றும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த தெரிவித்துள்ளார். இதையொட்டி, 15ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை கர்நாடக மாநிலம் தலைகாவிரியில் இருந்து தொடங்கி, வரும் 16ம் தேதி பூம்புகாரில் நிறைவு பெறுகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு நாளை 12ம் தேதி வரும் யாத்திரை, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், கோவிந்தபுரம், கஞ்சனூர், கதிராமங்கலம், குத்தாலம், மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் கடற்கரையில் சிறப்பு ஆரத்தி பூஜைகளுடன் நடைபெறுகிறது. பொதுமக்கள் பங்கேற்று காவிரி அன்னையை வரவேற்று, படித்துறைகளை தூய்மையாக பாதுகாக்க உறுதி ஏற்க அன்புடன் அழைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி