தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குச் சொந்தமான மகாத்மா காந்தி பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, குடிநீா்க் குழாய்கள் மற்றும் கழிவறைகள் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம். எல். ஏ. பூங்காவை திறந்து வைத்தாா். மேலும், ரூ. 33 லட்சம் மதிப்பில் புதிய நூலகக் கட்டடம் மற்றும் ரூ. 16. 50 லட்சம் மதிப்பில் பொது விநியோகக் கட்டடம் ஆகியவையும் திறக்கப்பட்டன. இந்நிகழ்வில் மேயா் க. சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.