திருவிடைமருதூர் அருகே உள்ள திருநறையூரில் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு சனி பகவான் ஜோஷ்டடா தேவி மந்தா தேவி என திரு தேவியருடன் மாந்தி குளிகன் என இரு புதல்வர்களுடன் குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கிறார். இந்த கோயிலுக்கு சினிமா நடிகர் ஸ்ரீமன் தன் மனைவியுடன் நேற்று வந்தார். கோயிலில் அவர் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். சிறப்பு பூஜைகள் கோயில் அர்ச்சகர் ஞானசேகர் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் செய்தனர். கோயில் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. நடிகர் ஸ்ரீமன் கோயிலுக்கு வருகை தந்த செய்தி பரவியதும் பொதுமக்கள் பலரும் கோயிலுக்கு வந்து ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.