தஞ்சை: ரயிலில் தவறவிட்ட கணினி உரியவரிடம் ஒப்படைப்பு

ஆந்திர மாநிலம் ஹைதராபாத், கண்டிக்குடா, சொர்ணபுரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரா. மது (65). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கும்போது தவறுதலாக தனது விலை உயர்ந்த ஐ-பேட் மடிக்கணினியை ரயிலில் தவறவிட்டார். 

இதையடுத்து ரயில் புறப்பட்டு சென்றதும் ரயில்வே காவலரிடம் புகார் செய்தார். இதையடுத்து அவர் அந்த ரயிலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் வெங்கடேசனுக்கு தகவல் அளிக்க, அவர் அந்த மடிக்கணினியை மீட்டு கும்பகோணம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் மதுவுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து மடிக்கணினியை ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி