தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் கோவி செழியன் திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 12 மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி வரவேற்றார். கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தர் முன்னிலை வகித்தார். முன்னாள் எம். பி செ. ராமலிங்கம், கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி நன்றி கூறினார்.