இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சியில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் க. அறிவழகன் தலைமையில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R. K. பாரதி மோகன் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் சாதனைகள் குறித்து விளக்கம் பிரசுரங்களை வீதி வீதியாக சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சோழபுரம் பேரூர் கழக செயலாளர் ஆசாத் அலி, கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன், மாநில அம்மா பேரவை செயலாளர் ஏ வி கே அசோக்குமார், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் அழகு த. சின்னையன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி