ஆடுதுறை அருகே 4 டன் எடையுள்ள தூக்குத் தேர் திருவிழா

ஆடுதுறை அருகே நாகரசம்பேட்டை அழகு நாச்சியம்மன் கோயில் 163-ம் ஆண்டு தூக்குத் தேர் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 15 நாட்கள் விரதமிருந்த சுமார் 300 பக்தர்கள், 4 டன் எடையுள்ள சக்கரமில்லாத தூக்குத் தேரைத் தங்கள் தோள்களில் சுமந்து, விளைநிலங்கள் மற்றும் வீதிகள் வழியாக 6 கி. மீ. தூரம் ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி