திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ஒருவர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூர் சாலை பூக்கொல்லை அருகே சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அரியமங்கலம் காமராஜர் நகர் ஜிடி நாயுடு தெருவைச் சேர்ந்த நிவாஸ் பாபு என்பவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகளை காந்தி மார்க்கெட் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி