தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வானரங்குடிக்கு வந்த இளைஞர் சத்யராஜ் (38) காணவில்லை என அவரது தாய் அம்பிகா திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2025 நவ. 25ம் தேதி சகோதரி இறப்பிற்காக வந்த சத்யராஜ், டிச. 12ம் தேதி திருப்பூர் புறப்பட்டார். அதன் பிறகு தாயை தொடர்பு கொள்ளவில்லை. திருப்பூர் சென்று தேடியும் கிடைக்காததால், காவல் ஆய்வாளர் அகிலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.