தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே கடையகுடிகோயில் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த டெரிடோன்(32) என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆதனூரைச் சேர்ந்த இவர், சொந்த ஊரான கடையக்குடியில் குலதெய்வ கோயிலுக்கு வந்துள்ளார். கோயில் குளத்தில் மதுபோதையில் நிலைதடுமாறி விழுந்ததில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.