திருவையாறு அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருவையாறு பள்ளி சந்தை சேர்ந்த விஜய் இவர் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Apache வெள்ளை நிற இருசக்கர வாகனத்தை ஒருவன் திருடிக் கொண்டு திங்களூர் பிரிவு சாலை அருகே வாகனத்தை தள்ளிக் கொண்டு வரும்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவனை பிடித்து விசாரித்தனர். 

அப்போது முன்னுக்குப் பின்னாகப் பதில் அளித்த நிலையில் சந்தேகப்பட்ட போலீசார் விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (எ) கலியமூர்த்தி வயது (30) என்பதும் இவன் மீது பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, அடிதடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அடுத்து வாகன உரிமையாளர் விஜய் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி