பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும்: எடப்பாடி

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் காய்ந்து வரும் நெற்பயிர்களை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாயிகள் விளைவித்த பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நடவு செய்த நெற்பயிர்கள் விளைச்சல் பெற இன்னும் 20 நாட்களுக்கு தண்ணீர் தேவை என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி