வல்லம் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு: தடை மனு தள்ளுபடி

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் நரசிங்க பெருமாள் கோயிலில் வைகானச ஆகமப்படி குடமுழுக்கு நடத்தப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. வடகலை சம்பிரதாயம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றாமல், வைகானச ஆகமப்படி குடமுழுக்கு நடத்தப்படுவதாக கும்பகோணத்தைச் சேர்ந்த பத்ரி நாராயணன் என்பவர் தடை கோரியிருந்தார். கோயில் நிர்வாகம் தென்கலை முறையைப் பின்பற்றுகிறது என்பதற்கு ஆதாரம் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குடமுழுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் நீதிமன்றத்தை அணுகியதும், முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததும் மனு தள்ளுபடிக்குக் காரணங்களாகக் கூறப்பட்டன. இதன் மூலம் பிப்ரவரி 8-ஆம் தேதி (இன்று) திட்டமிட்டபடி குடமுழுக்கு நடைபெறும் என உறுதியானது.

தொடர்புடைய செய்தி