தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணியில் 5 லட்சம் நிர்வாகிகள் மற்றும் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார். நாட்டிலேயே எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத வலுவான கட்டமைப்பு திமுக இளைஞரணிக்கு மட்டுமே உள்ளதாகவும், அரசியலை பொழுதுபோக்காக நினைக்கும் கூட்டங்களுக்கு மத்தியில், திமுக இளைஞரணி ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.