தஞ்சையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி இன்று தொடக்கம்

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தற்போது டிஎன்பிசி குரூப் 2 மெயின், குரூப் 4 தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு இன்று 18ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் காலை 10.30 முதல் மாலை 1:30 வரை நடைபெறுகிறது. வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரில் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி