தஞ்சை அருகே சோகம்.. ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

தஞ்சாவூர் அசோக் நகரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் தருண் (14), ஞாயிற்றுக்கிழமை ராயந்தூரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தபோது, தென்பெரம்பூர் அணைக்கட்டு வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளித்துள்ளார். எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாயமான தருண், திங்கள்கிழமை தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி